உங்கள் வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்து இருக்க வேண்டுமென்றால் தவறியும் கூட இவ்வாறான செயல்களை உங்கள் சமையலறையில் செய்து விடாதீர்கள்

நற்றுணையாவது நமச்சிவாயவே!

0 37

உங்கள் வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்து இருக்க வேண்டுமென்றால் தவறியும் கூட இவ்வாறான செயல்களை உங்கள் சமையலறையில் செய்து விடாதீர்கள்

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறைக்கு அடுத்ததாக மிகவும் முக்கியமான இடம் என்று பார்த்தால் அது சமையல் அறைதான். அனைவருக்கும் வயிறார சாப்பாடு சமைக்கும் இடம் என்றுறால் அது இந்த சமையலறையில் தான். மனிதன் உயிர்வாழ, வேலை செய்ய உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பது உணவின் மூலம் தான். எனவே இந்த உணவுகள் அனைத்தும் தயாராகும் இடமான இந்த சமையலறை மிகவும் புனிதமான இடமாகும். எனவே வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கவும், மகாலட்சுமியின் அம்சம் கிடைக்கவும், ஐஸ்வர்யம் நிலைத்திருக்கவும் சமயலறையில் நமக்கும் தெரியாமல் செய்யும் தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மேன்மேலும் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். மன நிம்மதி இருக்காது. அதிலும் சமையலறையை அதிகமாக பயன்படுத்தும் பெண்கள் தான் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாருங்கள் அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களும் அந்த வீட்டின் மகாலட்சுமியாக பார்க்கப்படுகிறார்கள். எனவேதான் பெரியவர்கள் பெண்கள் எப்போதும் மங்களகரமாக இருக்க வேண்டும், சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பெண்கள் அ0ழுதால் வீட்டில் துன்பம் உண்டாகும் என்றும் கூறுவார்கள். எனவேதான் பெண்பிள்ளையை அழாமல் பார்த்துக் கொள்வார்கள்.

ஒரு வீட்டில் எத்தனை ஆண் பிள்ளைகள் இருந்தாலும் வீட்டிற்கு வாங்கி வரும் சம்பளத் தொகை, பழங்கள், இனிப்புகள் அனைத்தையும் பெண் பிள்ளைகளிடம் தான் கொடுப்பார்கள். அவர்களிடம் கொடுத்து அவர்களின் சந்தோஷம் முகத்தில் நிலைத்திருந்தால் அந்த குடும்பமே சந்தோஷமாக இருக்கும். என்பது அனைவருக்கும் இருக்கும் தீர்க்கமான நம்பிக்கையாகும்.

ஆனால் வீட்டுப் பெண்கள் முகத்தில் சோகம் நிறைந்திருந்தால் அவர்கள் மற்றவர்களுக்கு உணவு பரிமாறும் பொழுது அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் இந்த சோகம் நிறைந்து விடும். எனவே மேன்மேலும் துன்பம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு சோகம் சுமந்த மனதுடன் சமையலறையை அதிகமாக பயன்படுத்தும் பெண்களால் வீடு முழுவதும் துன்பம் சூழ்ந்து கொள்ளும்.

அதற்கு முதலில் சமையலறையில் இரும்பு பாத்திரங்கள் மற்றும் மண் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அடுத்ததாக சமையலறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும். இதன் மூலம் நிச்சயம் வீட்டிற்குள் வறுமை சூழ்ந்து விடும். அனைவரது வீட்டிலும் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டியை சமையல் அறையில் வைப்பதைத் தவிர்த்து விடவேண்டும்.

சமையல் அறைக்கு அருகில் உள்ள இடத்தில் இந்த குளிர்சாதனப் பெட்டியை வைத்து கொள்ளலாம். சமையலறையில் அஷ்டலட்சுமியின் படம் அல்லது அன்னபூரணியின் படத்தை வைத்திருக்க வேண்டும். இந்த படத்திற்கு அருகில் உப்பு ஜாடியை வைத்துக்கொண்டு, அதிலிருந்து தினமும் உப்பு எடுத்து சமையலுக்கு பயன்படுத்தி வர எப்பொழுதும் அதிர்ஷ்டமும், மகா லட்சுமியின் அருளும் இல்லத்தில் நிறைந்திருக்கும். அடுத்ததாக சமையல் அறையில் இருக்க வேண்டிய இரண்டு பொருட்கள் ஊறுகாய் ஜாடி மற்றும் நெல்லிக்காய் இவற்றை தவறாமல் பயன்படுத்தி வர குபேரரின் அருளும் கிடைத்துவிடும்.

நற்றுணையாவது நமச்சிவாயவே!

Leave A Reply

Your email address will not be published.