இந்த 10 விஷயங்களில் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம்!

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. (திருக்குறள் - 59)

0 67

இந்த 10 விஷயங்களில் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம்!

1.”நான் அழகாக இல்லை” என்று வெட்கப்பட வேண்டாம்.
அழகைவிட அறிவும் அன்பும் தான் முக்கியம்.

2.மலிவான ஆடைகளை அணிகிறேன் என்று வெட்கப்பட வேண்டாம்.
உங்கள் ஆடைகள் உங்கள் திறமையை தீர்மானிக்காது.

3.ஏழ்மையான பெற்றோர் இருப்பதாக வெட்கப்பட வேண்டாம்.
அவர்கள் இல்லாமல் இன்று நீங்கள் இல்லை.

4.ஏழை நண்பர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்று வெட்கப்பட வேண்டாம்.
உண்மையான நட்பு கடைசி வரை இருப்பதே பெருமை.

5.எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன் என்று வெட்கப்பட வேண்டாம்.
வெற்றி என்பது தோற்றத்தால் அளவிடப்படுவதில்லை.

6.வருமானம் குறைவான தொழில் செய்கிறேன் என்று வெட்கப்பட வேண்டாம்.
உங்கள் உழைப்பில் நேர்மை இருந்தால் அதுவே பெருமை.

7.பணம் அதிகமாக இல்லையே என்று வெட்கப்பட வேண்டாம்.
நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தால் போதும்.

8.அடுத்தவர்களைப் போல கார், பங்களா இல்லையே என்று வெட்கப்பட வேண்டாம்.
நோய் நொடி இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய செல்வம்.

9.உடம்பு குண்டாக இருக்கிறது என்று வெட்கப்பட வேண்டாம்.
இறைவன் கொடுத்த உடலை அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

10.பிறருக்கு தானமாக கொடுக்க எதுவும் இல்லையே என்று வெட்கப்பட வேண்டாம்.
உங்கள் அன்பையும் புன்னகையையும் தானமாக கொடுங்கள்; அதைவிட சிறந்த தானம் வேறில்லை.

இவற்றில் உண்மையாக இருங்கள்;
நீங்களே உங்களுக்கு உண்மையானவராக இருப்பீர்கள்.

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. (திருக்குறள் – 59)

Leave A Reply

Your email address will not be published.