ஆயிரம் நாட்களில் ஆயிரம் திருக்கோயில்கள் உழவாரப்பணி செய்தல் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தலைவர் சூளுரை
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆட்சி மன்ற கூட்டம் தஞ்சையில் லட்சுமி ஓட்டலில் 1/.11/2025 மாலை 6 மணியளவில் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் சந்திரபோஸ் பெருமாள் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கே மகேந்திரன் பெருங்கோட்ட தலைவர் மாஸ்டர் சுரேஷ் ஆகியோரின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது இக்கோட்டத்தில் தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி வைஜெயந்தி ராஜன் அவர்கள் புதிய மாநில தலைவராக திரு டி ஆர் எஸ் திருமலை செந்தில் அவர்களும் மாநில பொதுச் செயலாளர் திரு என் டி கண்ணன் அவர்களும் தேசிய பொதுச்செயலாளர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களால் நியமனம் செய்யப்பட்டது அறிமுகம் செய்து வைத்தார்கள்.
மாநிலத் தலைவர் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டு ஏற்புரை ஆற்றினர் தலைவர் தனது ஏற்புரையில் சிறப்பான அறிவிக்கையில் ஆயிரம் நாட்களில் ஆயிரம் உழவாரப்பணி திருக்கோயில்களில் நடைபெற ஏற்பாடு செய்தல் என்கிற சிறப்பான அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டார் அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் அவர்களும் தலைவர் இட்ட பணியை சிறப்பாக குறிப்பிட்ட நாட்களில் செய்திட வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொண்டார் மேலும் மாஸ்டர் சுரேஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் காசிராஜன் பிரச்சார பிரிவு செயலாளர் இரா கரந்தை கண்ணன் நன்றி கூறினார் கூட்டத்திற்கு மாவட்ட மண்டல மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

தலைப்பு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் நியமனம் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாநிலத் தலைவர் டி ஆர் எஸ் திருமலை செந்தில் பொதுச் செயலாளர் என் டி கண்ணன். அவர்கள் ஆயிரம் நாட்களில் ஆயிரம் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்வோம் என சூளுரை