பலன் தரும் பரிகாரங்கள்

தீப ஒளி மந்திரம் :சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன ஸம்பதாம் |மம புத்தி ப்ரகாசய தீபம் ஜோதி நமோஸ்துதே!

0 40

பலன் தரும் பரிகாரங்கள்

பச்சைக்கற்பூர தீபப் பரிகாரம்

புதிதாக நல்லெண்ணெய் பாட்டில் வாங்கி அதில் பச்சைக்கற்பூரத்தை போட்டு இந்த எண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்ற தெய்வீக அதிர்வலைகள் ஏற்பட்டு இலட்சுமி வாசம் உண்டாகும். மகாலட்சுமியை தியானித்து 27 முறை “ஸ்ரீம்” பீஜ மந்திரம் சொல்லவும். குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை தாமரைதண்டு திரியில் ஏற்ற இலட்சுமி கடாட்சம் பெருகும்

சோம்பு பரிகாரம்

கைப்பிடி சோம்பை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இதை கையில் வைத்து நீங்கள் அடையவேண்டிய விருப்பங்களை வாய்விட்டு சொல்லி் சொல்லியதை ஒரு பேப்பரில் எழுதி்ச் சுருட்டி அந்த சோம்பினுள் வைத்து கண்ணாடி பாட்டிலை ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்

அவ்வப்போது எடுத்து மூடியை திறந்து விருப்பங்களை சொல்லிவிட்டு் மறுபடியும் வைத்துவிடுங்கள்…180 நாட்களில் உங்கள் எண்ணம் நிறைவேறும் நம்பிக்கையுடன் செய்யுங்கள்

நிலுவைப் பணம் வர தாந்த்ரீக பரிகாரம்

செவ்வாய்க்கிழமை ஒரு வெள்ளை காகிதத்தில் சிவப்பு மையால் “ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்” என்று 108 முறை எழுதவும். அதை பணம் தொடர்பான ஆவணங்களுடன் வைத்துக் கொள்ளவும்.

பூட்டு பரிகாரம்

வெளியில் சொல்லமுடியாத கடுமையான பிரச்சனைகள் தீர தீர்க்க முடியாமல் திண்டாட வைக்கும் பிரச்சனைகள் தீர நிறைவேறாத நியாயமான விருப்பங்கள் நிறைவேற…

வெள்ளிக்கிழமை மாலை கடைக்கு சென்று ஒரு பூட்டை வாங்க வேண்டும் அப்படி வாங்கும் போது கவரைக்கூட பிரிக்காமல் வீட்டுக்கு எடுத்து வந்து இரவு தூங்கும் முன் கவரை பிரித்து பூட்டை தலைக்கடியில் வைத்து தூங்கி மறுநாள் அருகாமையில் உள்ள கோயிலுக்கு பூட்டினை எடுத்து சென்று தானமாக கொடுத்து விடவும்

கோயிலில் அந்த பூட்டினை மூடி திறந்து பயன்படுத்த ஆரம்பிக்கும் போது உங்கள் பிரச்சனைகள் படிபடியாக விலகுவதை கண்கூடாக அறியலாம்

அகல் விளக்குகள் ஏற்றும் பரிகாரம்

வீட்டில் வடக்கு நோக்கி இரு அகல்விளக்குகள் ஏற்றுவதால் செல்வம் பெருகும் மகிழ்ச்சி நிலைக்கும். வீட்டில் மேற்கு நோக்கி இரண்டு அகல் தீபங்கள் ஏற்ற உறவினர் ஒற்றுமை ஏற்படும் கடன் தொல்லை விலகும். வீட்டில் கிழக்கு நோக்கி இரண்டு அகல் தீபங்கள் ஏற்றினால் உங்களை தொடர்ந்து வந்த துன்பங்கள் காணாமல் போகும் சமூகத்தில் மதிப்பும் கெளரவம் உண்டாகும்

தீப ஒளி மந்திரம் :சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன ஸம்பதாம் |மம புத்தி ப்ரகாசய தீபம் ஜோதி நமோஸ்துதே!

Leave A Reply

Your email address will not be published.