ரூபாய் நோட்டுகள் அழகாக இருந்தாலும்… அழுக்காக இருந்தாலும்…. அதன் மதிப்பு என்றுமே குறைவதில்லை …

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாமனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!

0 30

ரூபாய் நோட்டுகள் அழகாக இருந்தாலும்… அழுக்காக இருந்தாலும்…. அதன் மதிப்பு என்றுமே குறைவதில்லை …

பணம் அல்லது ரூபாய் பற்றிய தகவல்கள் உங்களுக்காக…..

பணத்தைச் சம்பாதிக்கும் போது நாம் செய்யும் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்போதுதான், ஒரு ரூபாயை ஈட்டுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்து அதன் மதிப்பை முழுமையாகக் கற்றுக்கொள்கிறோம்.

பணம்
இல்லாதபோது தெரியும் மதிப்பு நம்மிடம் பணம் இருக்கும் வரை அதன் அருமை தெரிவதில்லை. அவசரத் தேவைக்குக் கடன் வாங்க முயலும்போதோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பணம் பற்றாக்குறையாக இருக்கும்போதோதான் அதன் உண்மையான மதிப்பு ஒருவருக்குப் புரியும்.

வரவுக்கு மீறிய செலவு ஒரு நாள் வறுமையைக் கொடுக்கும். ஆடம்பரமான செலவு ஒரு நாள் அவஸ்தை பட வைக்கும்.
திட்டமிடாத செலவு ஒரு நாள் திண்டாட வைக்கும்.

பணத்தைச் சம்பாதிக்கும் போது நாம் செய்யும் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்போதுதான், ஒரு ரூபாயை ஈட்டுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்து அதன் மதிப்பை முழுமையாகக் கற்றுக்கொள்கிறோம்.

ஆடம்பரம் எனும் பாதையில் சென்றவர்கள் தான், அடமானம் எனும் பாதையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பிறரிடம் “கடன் கேட்டு” காத்திருக்கும் போது தான் தன் மதிப்பையும், பணத்தின் மதிப்பையும் பலரும் உணர்கிறார்கள் .

பணத்திற்காகத் தவறு செய்பவர்கள், திருந்துவார்கள் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பணம் இருக்கும் திமிரில் தவறு செய்பவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

ரூபாய் மற்றும் பணம் பற்றிய பிரபலமான தமிழ் பழமொழிகள், அதன் ஆழமான அர்த்தங்களை மிகச் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை மனித வாழ்க்கையில் பணத்தின் செல்வாக்கை எடுத்துரைக்கின்றன.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே : பணம் இருப்பவர்களுக்குத் தான் சமுதாயத்தில் முதல் மரியாதை கிடைக்கும்; அவர்களின் நற்குணங்களுக்கு மதிப்பு இருப்பதில்லை என்பதை உணர்த்தும்.

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் : பணம் கிடைக்கக்கூடிய இடத்தில், எதையும் செய்யத் துணியாதவர்களும் கூட அதற்காக முன்வந்து ஒத்துழைப்பார்கள்.

பணம் பத்தும் செய்யும் : பணம் இல்லாத காரியமும் இல்லை, அது உலகத்தில் எதையும் சாதித்துக் காட்டும் ஆற்றல் கொண்டது.

பணம் பாதாளம் வரை பாயும் : பணத்தின் செல்வாக்கு எல்லைகளையெல்லாம் தாண்டி, எந்த ஒரு ஆழமான காரியத்தையும் சாதித்துக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது.

பணமும் பணக்காரனும் ….

பணம் வலிமை வாய்ந்தது. பணக்காரன் தவறு செய்தாலோ, நாணயமின்றி நடந்தாலோ அவனை விட்டுவிடுவர். ஆனால் ஒன்றுமில்லா ஏழை தவறு செய்தால் அவன் செய்யாத தவறுகளையெல்லாம் அவன் மீது சுமத்தி அவனது வாழ்வை உருக்குலைத்து விடுவர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால்…. அது தவறான வழியில் தேடுவதுதான்.

பணத்திற்குக் கடல் நீரின் குணமும் ஒன்று உண்டு. அதாவது…..
கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகுமாம். அடங்கவே அடங்காது என்பதாகும்.

இன்னும் எவ்வளவோ அவர் அவர்கள் அனுபவத்திற்கு தகுந்தவாறு இருக்கின்றன….

கண்டிப்பாக இது ஒன்று மட்டும் நிச்சயம் ….

தவறான வழியில் ஈட்டப்படும் பணம் தவறான வழியில் தான் செல்லும். இது உண்மை….

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாமனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!

Leave A Reply

Your email address will not be published.